செவ்வாய், 22 ஜூலை, 2025

எப்போது புரிந்து கொள்ளப்போகிறீர்கள்?

 

நம் அரசியல் சட்டம்

முதல் குடிமகன்

இரண்டாம் குடிமகன் 

என்றெல்லாம்

நம் ஜனநாயகத்தின் மாண்பை

உயர்த்திப்பிடித்திருக்கிறது.

ஆனால்

ஊழல் மலிந்த கொடூரமான‌

சனாதனம்

அந்த "படிகளை"எல்லாம்

அவர்களது கொலுப்பொம்மைகளை

வைத்திருக்கும்

அலங்காரமாய்த்தான் வைத்திருக்கிறது.

எதன் கையிலோ பூமாலை

என்பார்களே.

அப்போது அது நம்"ஷரத்துக்களின்"

அலங்கோலம் தான்.

இவர்களின்

கடவுள் பொம்மைகளுக்குள் எல்லாம்

வெறும் பஞ்சும் வைக்கலும்

அடைத்து வைத்து

ஆராதனை செய்வதற்குப் பதில்

ஹிடலர்களின் முசோலினிகளின்

வெறிகளை அல்லவா 

நிரப்பி இருக்கிறார்கள்.

"ஓட்டு தாங்கிகளாக"

வலம் வருகின்ற அன்பான மக்களே!

நீங்கள் வெறும் 

களிமண் பொம்மைகள் அல்ல

என்பதை

எப்போது புரிந்து கொள்ளப்போகிறீர்கள்?

_______________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக