துறுத்த துறுத்த அவள் கண்கள்.
கன்னத்தோடு
கைகளில் ஏந்திக்கொள்ள
வேண்டும்போல்
இருக்கிறது.
அவள் கண்களின் கருங்குழிக்குள்
எல்லாம் நன்றாய்
தெரிகிறது.
என் உடைந்த உள்ளத்தின்
கண்ணாடிச்சில்லுககள்.
வண்ண வண்ன
கலிடோஸ்டோப்புகளில்
என்
கழுவேற்றங்கள்.
"போதுமடா சாமி"
கை நிறைய நிறைய
இந்தக் கவிதைகள் தான்.
________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக