செவ்வாய், 15 ஜூலை, 2025

ஏ ஐ யில் குருமா...

 ஏ ஐ யில் குருமா...

____________________________________


விஞ்ஞானம் வளர்ந்து விட்டது

என்று

பெருமையாய் நாம்

நிமிர்ந்து உட்காரும்போது

சடக்கென்று உள்ளே

நம் முதுகெலும்பு முறிந்து விழும்

சத்தம் கேட்கிறது.

பி யூ சின்னப்பா நடித்த‌

பழைய ரத்னக்குமாரில் ஒரு

காட்சி வரும்.

போடட்டுமா?...என்று

பயம் காட்டிக்கொண்டே

ஒரு எலும்புக்கூடு 

எகத்தாளத் தாளமாய் சிரிக்கும்.

அது போல்

இந்த "நுனிக்கொம்பர் இறந்து ஊக்கும்"

குவாண்டம் கம்பியூட்டர் விஞ்ஞானம்

இலை விரித்துக்கொண்டு

பந்திக்கு உட்கார்ந்து இருப்பதில்

நம் அண்டங்கள் உள்ளிட்ட‌

பல மில்லியன் அண்டங்கள்

பரிமாறப்பட இருக்கின்றன.

பில்லியன் ட்ரில்லியன் டாலர்களின்

அசுரப்பசியில்

கறி விருந்து சமையல்

ஆகிக்கொண்டிருக்கிறது.

இத்தனையும் வைத்து

சந்தைப்போட்டிக்கு மில்லியன் மில்லியன் 

அம்புகள் 

கூர் தீட்டிக்கொண்டிருக்கின்றன.

அது என்ன?

சூரியன் கோழி மாதிரி

யுடோப்பியா யுடோப்பியா

என்று 

கூவிக்கொண்டே இருப்பது.

அதைப்பிடித்து அடித்து

ஏ ஐ யில் குருமா வைங்கடா!


______________________________________

சொற்கீரன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக