வால் முளைத்த "டார்வின்"கள்.
_____________________________________________
மனிதன் என்பவன்
அந்த "குரங்கு சேட்டைகளின்"
மிச்ச சொச்ச சிந்தனைப்பிம்பங்கள் தான்.
பரிணாமக் கோட்பாட்டை
அந்த ஆரண்ய காண்டங்களில்
கிளை விட்டு கிளை தாவும்
வால் முளைத்த அந்த
கண்ணாடிச்சிமிஷங்களின்
பிம்பங்களிலிருந்தும்
படித்துக்கொள்ள வேண்டியது தான்.
விறைத்த அந்த முதுகெலும்பன்
(ஹோமொஎரக்டஸ்)
நிமிர்ந்து நின்று
வியந்து கொண்ட போது தான்
பரிணாம அத்தியாயங்களின்
பக்கங்கள் சர சரத்தன.
நானூறு கோடி ஆண்டுகளின்
நீண்ட அந்த பேனா
எழுதியதெல்லாம்
இந்த வால் முளைத்த டார்வின்களின்
சிந்தனை "சேட்டைகள்" தான்.
மிகவும் சுவையான சரித்திரம்
மனிதனின் காற் சுவடுகளில்
பதிந்து கிடக்கின்றன.
________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக