ஜனநாயகம் தேரும் ஈக்கள்
தெருவெல்லாம்
மொய்த்திருக்கும்.
அதனுள்ளும்
பணநாயகம் செய்யும்
சாக்கடை ஈக்கள்
தூள் கிளப்பி புழுதிக் காட்டின்
புதிர்க்காட்டில்
வளைய வளைய வந்து வந்து
மொய்க்கும்.
இரைச்சல் இடும்!
"ஈ மொய்த்த பண்டங்கள்"
ஆட்சி நலத்துக்கு கேடு.
சாதி மதப்பேய்கள் ஆளும்
வன்மத்தை புரிந்து கொள்வீர்.
தமிழன் முகம் அழிந்து
அகம் நசிந்து போகலாமோ?
தமிழா! சிந்தி!
உன் சரித்திரம் வெறும்
பிணக்குவியலாய்
உன் காலடியில்.
உன் முகவரி எங்கே?
உன் முகங்களும் எங்கே?
புதுப்பித்துக்கொள்.
இல்லையெனில்
புதைந்தே போவாய்.
விழித்துக்கொள் தமிழா!
______________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக