செவ்வாய், 15 ஜூலை, 2025

"சால மிகுத்துப்பெயின்..."

 "சால மிகுத்துப்பெயின்..."

_________________________________________


அன்பே ஆருயிரே என்று

தடவி தடவி

எழுதிக்கொண்டிருக்க வேண்டும்.

மயில் பீலிகளையும்

பட்டாம்பூச்சிகளையும்

பட்டாப்போட்டுக்கொண்டு

வார்த்தைகளை 

பதியம் போட்டுக்கொண்டிருக்க‌

வேண்டும்.

போதுமடா சாமி.

"..அச்சிறும் அப்பண்டம் சாலமிகுத்துப்

பெயின்.."

மனிதன் வெயிலில்

மாய்ந்து போகிறான்.

வேர்வை அமிலத்தில்

எரிந்து போய்க்கொண்டிருக்கிறான்.

உழைப்பும் மூலதனமும்

பொய் முடிச்சுப் போட்டுக்கொண்டு

இந்த உலக்மே

மனித எலும்புக்கூடுகளின்

மிச்ச சொச்ச சந்தையாகிப்போனது.

இதில்

கடவுள் வேறு 

வித விதமாய்

வண்ண வண்ணமாய்

சீரியல் பல்புகள் மாட்டிக்கொண்டு

சாதிகளின் வெட்டரிவாள்களோடு

கும்பாபிஷேகங்களில்

மொத்த மண்ணையே

தீட்டு ஆக்கிக்கொண்டிருக்கிறார்.

மனிதம் என்னும் புனிதம்

எல்லா குப்பைகளையும்

எரிக்க ஆவேசம் கொண்டு

கொழுந்து வீசுகிறது.

சொற்பிணங்களை சோதிக்கவிதைகளாய்

குவித்தது

போதும் மனிதா?

புழு கூட நசுங்கும்போது

அவ்வளவும்

எரிமலைக்குழம்புடா.

எழுச்சி கொள்.


________________________________________________

சொற்கீரன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக