திங்கள், 28 ஜூலை, 2025

தாத்தா

 

தாத்தா
__________________________________________
சங்கத்தமிழ் அச்சிட்டுத் தர‌
தேடித் தேடி தமிழ்த்தேனியாய்
பறந்து திரிந்து
தந்தவர் தான் "தமிழர் உ வெ.சா."
ஆனாலூம்
கோவிலுக்குள்
நாடார் மக்கள் நுழையக்கூடாது
என்று
நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததாய்
ஒரு ஆதாரம் காட்டப்படுகிறதே.
இந்த தாத்தா
தமிழ்ப்பேரன்களையெல்லாம்
கோவிலுக்கு வெளியே நிறுத்தி விட்டு
உள்ளே
எந்த கடவுளை கும்பிட்டுக்கொண்டிருந்தார்?
"யாதும் ஊரே!யாவரும் கேளிர்"
என்று சுவடிகள் சொன்ன‌
ஒரு சமநீதிச்சமுதாயத்தின்
வெளிச்சத்தை மறைத்தது எது?
எந்த நூல்
எந்த நூலை மறைத்துக்கொண்டு
நின்று
மறை ஓதியது என்பதை
அறியாதவரா நம் தமிழ்த்தாத்தா?
ஆம்
அவர் நம் தமிழ்த்தாத்தா இல்லை
என்பதையே காட்டுவது தான்
இந்த "தமிழ்த்தாத்தா" பெயர்.
__________________________________________
சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக