Blue film is blue film, what is there to see...
'திரைத்தொண்டர்' என்னும் நூலில் பஞ்சு அருணாசலம் கூறுவது...
"காயத்ரி", எழுத்தாளர் சுஜாதா சாரின் கதை. அந்தக் கதை அப்போது தினமணிக்கதிரில் வந்திருந்தது. குறுநாவல், சிறுகதை இரண்டுக்கும் இடைப்பட்ட அளவில் வந்திருந்த கதை. அந்தக் கதையைப் படித்ததும் 'வித்தியாசமா இருக்கே'எனத் தோன்றியது. இதுபோன்ற கதைகளை ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் தமிழில் படிக்கும்போது அது எனக்கு மிக வித்தியாசமாகவும் புதிதாகவும் தெரிந்தது. ஏனெனில் அப்போது …
மேலும் காண்க
My commentary KAVITHAI
ப்ளு ஃபிலிம் என்ற உடன்
ஆண் பெண் உறுப்புகளின்
பிரம்ம தரிசனம் மட்டுமே
ஸ்லோகங்களாக ஆக்கப்பட்டு
"காட்சிக்கூச்சல்"களாய்
யாகம் வளர்க்கிறது.
அது
சமுதாய அடுப்பங்கரையின்
பசி நெருப்புகளின்
கங்குகள்
கதைகள் அவிழ்க்கும்
கனமான நேரங்கள்.
இந்த "கெட்ட வார்த்தை"யின்
ஈடன் தோட்டங்கள்
எழுதும் வசனங்கள்
கேளா ஒலிகளில் இன்னும்
புதைந்தே கிடக்கின்றன.
____________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக