ஒரு சோக ரசம்.
_______________________________________________
ஒரு பஞ்சாப் சிங்க மனிதர்.114 வயது.ஓலிம்பிக் போட்டிகள் எல்லாம் அவருக்கு ஜுஜுபி.
ஆனாலும் திடேரென்று ஒரு சாலைவிபத்து அந்த "114"க்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது.
யாரய்யா "இந்த இரும்பு மனிதனுக்கு" சாலை விபத்தை அனுப்பியது?
கடவுள் கர்ஜித்தார்.
எமன் "அய்யா கணக்கு முடிந்து விட்டதே என்ன செய்வது? என்றான்.
"கணக்காவது ஒண்ணாவது நான் பாட்டுக்கு அவரது கம்பீரமான தாடி மீசைக்குள்" இருந்து இங்குமங்கும் உலவிக்கொண்டிருந்தேனே! எங்கே உன் கணக்கை காட்டு." கடவுள் கடு கடுத்தார் புலம்பினார்.
"எங்களை என்ன செய்யச்சொல்லுகிறீர்கள்? அன்றாடம் கோயில்களில்களிலிருந்து வேடதாரிகளின் சித்திரவத்திரவதைகள் தாங்காமல் தாங்களாகவே தற்கொலை செய்து கொண்டு இங்கே வந்து புலம்பிக்கொண்டிருக்கிறீர்களே.இந்த "கருப்புக்கணக்கே" இங்கு மலை போல் குவிந்து கிடக்கிறதே"
இது எமனின் கூலான கம்மெண்ட்.
"சரி தமிழ் நாட்டு வனங்களில் சிறகடித்த அந்த கன்னடத்துப் பைங்கிளிக்கு இப்போ என்ன அவசரம்? பாருங்கள் மொத்த அந்த காவேரியாற்று வெள்ளமெல்லாம் கண்ணீர் தான்.அணை உடையுமோ என்ற அபாயம்..."என்றார் அருகில் இருந்த நாரதர்.
ஆமாம்.ஆமாம்.நம் இந்திரவோகம் முழுவதுமே இன்று கதவடைப்பு தான்.
இந்திரன் தன் பங்குக்கு உதட்டைப்பிதுக்கி அழுதான்.கூடவே மேனகை ரம்பை ஊர்வசி திலோத்தமைக் குழுவும்
அழுது தேம்பியது.அந்த அழகு தெய்வம் இங்கே வந்து விட்டால் நம் கதி? என்று தான் அங்கு அழுகையின் அரங்கேற்றம்.
கோடம்பாக்கத்து காக்கை குருவி கிளிகள் கூட சிறகுகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு
சிறகடிக்கின்றன.தூசி படிந்து கிடக்கும் சினிமாக்காமிரா லென்ஸ்களின் கண்ணீரில் தூசியெல்லாம் கழுவப்பட்டன.
1950 60 களின் அந்த இளமைபொங்கும் ஆண்டுகள் எல்லாம் கடல் கொள்ளாத சோகத்தை அலைகளாக வீசி வீசி அழுது கொண்டிருந்தன.
திரைக்கும் தரைக்கும் வித்யாசம் இல்லை.
ஒரு பெரும் இழப்பு வானம் வரை போய் முட்டி முட்டி அழுது கொண்டே இருக்கும்.
இந்த ஆழ்ந்த இரங்கல்களின் கண்ணீர்
நிச்சயம்
கிளிசரின் இல்லை.ஆம்
கிளிசரின் இல்லவே இல்லை.
இது மண்ணின் முழுதும் உயிர்ப்போடு படர்ந்திருக்கும்
ஒரு சோக ரசம்.
டைரக்டர்களே தள்ளி நில்லுங்கள்.
உங்கள் க்ளாப் ஸ்டிக்குகளுக்கு இங்கு வேலை இல்லை.
_______________________________________________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக