புதன், 9 அக்டோபர், 2024

மனத்துக்கண்...

 

மனத்துக்கண்...

_________________________________________


"மனத்துக்கண் மாசிலன்" 

ஆகிவிடு.

மதங்களும் தேவையில்லை.

கடவுள்களும் தேவையில்ல.

இந்த துப்பாக்கிச்சத்தங்களும்

தேவையில்லை.

உலகமயம் எனும் விஸ்வரூபம்

வளர்த்த வணிக விளம்பரத்துள்

எல்லா அறிவுகளும்

புதைந்து கொண்டுவருகின்றன.

கணினிகளும்

ராட்சச கரப்பான் பூச்சிகளாய்

அந்த லாபத்தீனி தேடி தேடி

வருகின்றன.

செயற்கை மூளையின்

அனக்கொண்டா வேர்கள்

இயற்கை மூளையையே

இல்லாமல் செய்து விடலாம்.

குவாண்டம் க்யூபிட்டுகள்

மனிதம் எனும் மகத்தான‌

மதிப்புகளை

வெறும் மின்காந்த சமுத்திரங்களில்

கரைத்துவிடும் 

அழிவு அலைகள்

இதோ

நம் முகத்தில் 

அறைந்து கொண்டிருக்கின்றன.

ஹைபர்போலிக் யுனிவர்ஸ்

எனும்

ஒரு எதிர் வளைவு பிரபஞ்சம் தான்

இதை தடுக்கும்.

எப்போது?

அந்தக் கேள்வியில் தான்

இருக்கிறது

நம் இருட்டும் வெளிச்சமும்!

‍‍‍‍

‍‍‍‍_______________________________________________

சொற்கீரன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக