வெள்ளி, 4 அக்டோபர், 2024

கொண்டாட்டங்கள்



கொண்டாட்டங்கள்


கொண்டாட்டங்கள்

மனிதனுக்குள்

ஒரு "சிண்ட்ரோமை"

குகை 

வைத்துக்கொண்டிருக்கிறது.

இதற்கு 

போதை ஊசிகள் தேவையில்லை.

மதங்கள் போதும்.

புராணங்கள் போதும்.

அம்புலிமாமாக்கதைகளுக்கு

கண் காது மூக்கு வைத்து

இன்னும் விசித்திர ஆயுதங்களுடன்

இந்த கொண்டாட்டங்கள்

கொடி உயர்த்துகின்றன.

கொண்டாட்டங்கள் வேண்டும் தான்.

மனிதனின் உந்தம் எனும்

"குவாண்ட" ஆற்றலுக்கு

ஸ்ரூடிங்கர் சொன்ன பூனை

விஞ்ஞானிகளுக்கு எல்லாம் 

ஒரு பொம்மை விளையாட்டு போல.

ஒரு பூனை இறந்து கொண்டே வாழ்கிறது

அல்லது

அது வாழ்ந்துகொண்டே இறக்கிறது

என்ற ஒரு மாயாவி உலகத்தை தான்

இந்த குவாண்டம் தன்னுள்

சுருட்டி வைத்திருக்கிறது.

இதை ஒரு அலை சமன்பாட்டுக்கணிதத்திலோ

அல்லது

ஹெய்சன்பர்க் சொன்னது போல‌

ஒரு மேட்ரிக்ஸ் கணிதத்திலோ

வறட்டுத்தனமாக எழுதிப்பார்த்துக்கொள்ளலாம்.

ஆனாலும்

கொஞ்சம் உற்சாகமாக இருக்க‌

இந்த பூனைகள் தேவைப்படுகின்றன.

நம் கொண்டாட்டங்களும் அப்படித்தான்.

கடவுள் எதற்கு?

கடவுள் 

அதற்கோ இதற்கோ அல்லது

எதற்காகவோ வேண்டும்.

கடவுள் இல்லை என்று

சொன்னாலும்

அதற்கும் இங்கே

பொய்மைகளை கொலு வைத்து தான்

விளக்கவேண்டும்.

நம் இந்திய வாழ்க்கைத்தத்துவங்களைப்

பாருங்கள்

கடவுள் இல்லை எனும் சூன்யத்தை

இட்டு நிரப்பவே

இந்த கொலு கொண்டாட்டங்கள்.

என்ற ஒரு அடிக்கருத்து 

இங்கே இழையாடுவதைப்பார்க்கிறோம்.

அறிவுக்கும்

ஒரு உள் மகிழ்ச்சியாக‌

விளையாட்டு தேவைப்படுகிறது.

நூறு நூறு ஆண்டுகளாக‌

இந்த கடவுள்க்கதைச்சுமையை

இப்படியாக சுமக்கத்தான் 

வேண்டியிருக்கிறது.

அந்த சுமையை சுமக்காவிட்டல்

நிச்சயம் கடவுள் இடம் பாசிபிடித்துவிடும்.

மறைமுகமாக கடவுள் இல்லை என்ற‌

பல்லக்கை தான்

அவர்கள் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.

உற்சாகப்படுத்திக்கொள்ள‌

துடுப்பு போடுபவ்ர்கள் போல‌

ஐலசா ஐலசா என்று

பஜனை செய்து கொள்வதில்

ஒரு பரம சுகம் தான்.

காதுகளில் 

பூக்களைச்சொருகிக்கொள்ளுங்கள்.

பூக்களே வேடிக்கை பாருங்கள் 

என்று.

_____________________________________________

சொற்கீரன்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக