எழுதி எழுதி செல்லும் கை தான்
விதி
என்று உமர்கய்யாம் சொன்னான்.
எழுதும் கை உன்னுடையது.
அதனுள் இன்னொரு
செயற்கை கை எனும்
கடவுள் எதற்கு?
என்று கேட்கும் துணிச்சல்
மனிதனுக்கு எப்படி வந்தது என்று
கடவுளுக்கு ஏற்பட்டது வியப்பு.
இயற்கை மூளையின்
ஒரு மூலையிலிருந்து
ஒரு செயற்கை மூளையை
பதியம் போட்ட
ஒரு கணினியன் பூங்குன்றன்
சொன்னான்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்று எப்போது
மனிதன்
ஆயிரம் ஆயிரம் ஆகாயமாய்
விரிந்தானோ
அப்போது ஏற்பட்ட துணிச்சலே
இது என்றான்!
_______________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக