களித்தொகை (1)
___________________________________________
கறி இவர் வேங்கையின் நுண்தகை வீக்கள்
மென் மழை தூஉய் நனிகளி போழ்தை
மீ மிசை உவப்ப தரும் தண்மையின்
நீழல் வீழ்த்தும் எல் என்னுப கதிரவன்
அதனை அவனும் ஆங்கு காசு மழை அன்ன
நிழற் பொடி பெய்த காட்சியில் மலிந்தான்.
அலர் அல்ல இஃது நீ தெளிதி
எனவாங்கு
அவள் வாள்நுதல் வருடி புல்லிய
வெள்ளிய அருவி இழிந்தன்ன
தழீஇ தந்தான் எல்லே நாண
இருள் கவித்து மஞ்சு தரிப்ப காண்.
_______________________________________சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக