ஞாயிறு, 6 அக்டோபர், 2024

நிழல்.

 




என் அச்சமே என் நிழல்.

இது என்னையே உறிஞ்சி 

தின்னுகிறது.

மீண்டும் அதையே 

உமிழ்கிறது.

அது எனக்குள் ஒரு

நில நடுக்கமாய்

என்னை பிய்த்துப்போடுகிற‌து.

இதற்கு வெளியே உள்ள‌

நிகழ்வு பிம்பமான 

வாழ்க்கைப் பிசிறுகள் கூட‌

இந்த நிழற்பிஞ்சுகள் தான்.

இதனால் தாறு மாறான சித்திரங்கள்

குமிழியிடுகின்றன.

சைக்கடெலிக் வர்ணங்களாய்

மனச்சுவரில்

இவை போஸ்டர்கள் ஒட்டுகின்றன.

சில சிகரமான நிழல் உச்சிகள்

கவிதைகள் ஆகின்றன

அதில் நான் ஒளிந்து கொள்ள

முயலுகின்றேன்.

உள்ளம் எனும் நெருப்பு 

பற்றிக்கொள்ளும்போது

எல்லாம் 

எங்கே போகின்றன?

மனவெளிகள் போல்

விண்வெளிகள்

நேனோ நேனோ காலக்கூறுகளில்

சிதைவுகளால் ஆன சித்திரங்களாய்

உலா போகின்றன்!


_______________________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக