புதன், 9 அக்டோபர், 2024

சோப்புக்குமிழிகள்‍‍..1

சோப்புக்குமிழிகள்‍‍..1

_________________________________________

 

அவள் 

எட்டு வயது

எலிவால் சடையில்

என் முன் மின்னலடித்தாள்.

நான்

பத்து வயது

பம்பரம் விடும்

"அலெக்ஸாண்டர் தி க்ரேட்"டாய்

அவள் மனச்சினிமாவுக்குள்

படமாய் ஓடுவேன்.

இந்த காதல் எனும் 

பிஞ்சுக்காமத்தின்

கல் வெட்டுகள் வேண்டுமா?

அம்பதுகளின்

காலண்டர்களில்

ஃபாசில்களை

தோண்டுங்கள்.

______________________________________

சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக