ஊழி
__________________________________
சொற்கீரன்
இவள் ஒரு சிரிப்பை
அவள் ஒரு சிரிப்பை
அவனிடம் வீசினாள்.
அவ்வளவே குருட்சேத்திரம்.
குதிரைகள் யானைகள்
செத்து மடிந்தன.
தேர்கள் உடைந்து
சிதறிப்போயின.
அம்புகள் மழை பெய்தன.
எல்லோரும் எங்கே?
வெற்றுத்திடலில்
ஒரு வெற்றுக்காகிதம்
எழுத்துக்கள் இன்றி
இரைந்து கிடந்தது.
ஊழியின் மௌனங்கள்
அதில் எழுதின.
கண்ணில் விழுந்த
பிரபஞ்சங்கள்
மோதித் தாக்கின.
மீண்டும் ஒரு
புதிய வெடிப்பு.
கல கல வென்னும்
சிரிப்பு மணிகள்
உதிர்த்தன உதிர்த்தன.
காதலுக்கு
கல்லறைகள் இல்லை.
ஆழக்கிடக்கும்
அன்பின் பிரளயம்
ஆயிரம் பிரபஞ்சங்களின்
கருப்பை அறிவீர்.
______________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக