"மொண்ணப் பயலுவளா"
===============================================ருத்ரா
ஒரு படத்தின் தலைப்பை
வாசிப்பதற்குள்ளே
இன்னோரு படம்
நம் முதுகைச் சுரண்டுகிறது.
ஐந்து நிமிடப் குறும்படங்களை
ரெண்டரை மணி நேரத்துக்கு
"சவ்வாய் உருட்டித் திரட்டி இழுத்து"
இளிக்கிற இனிப்புச் சவ்வு மிட்டாய்கள்
ஆக்குகிறார்கள்.
புதிய தலைமுறைகள்
புகுகின்ற வாசலாய்
சினிமா ஒரு பரிணாமம் உற்றது
என்ற மகிழ்ச்சி மட்டுமே மிஞ்சுகிறது.
இந்த புற்றீசல்கள்
படைப்புத்திறனை
கொள்ளை மலிவு ஆக்கலாம்.
புது முகங்கள் வரவேற்கப் படவேண்டியவர்களே!
ரசிகர்கள் அதே "விசில்"பறவைகள் தானே.
"உப்புமா"ப்படங்களில்
உப்பும் இல்லை ஒறப்பும் இல்லை என
ஓடிவிடமாட்டார்களா என்ன!
"அட மொண்ணப் பயலுவளா இதுக்கு மேலே
என்னடா படம் எடுக்கிறது ?"
பயப்படாதீர்கள்
இந்த தலைப்பிலும் படங்கள் வரலாம்!
========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக