வெள்ளி, 23 செப்டம்பர், 2016

மெரீனா


மெரீனா
=============================ருத்ரா இ.பரமசிவன்

ஈசல்கள் குவிந்தன‌
வெளிச்சம் தேடி.
புழுக்கத்தின் புழுக்கூடுகள்
இங்கு வந்து
சிறகு விரித்து தென்றல் அருந்தி
கூட்டை சிதைத்து எறிந்தன.
ஆனாலும்
அந்த மணல்துளிகளை
எண்ணி எண்ணி
பொழுது போவது தெரியாமல்
காதலின் கைக்குட்டையில்
வானத்து நட்சத்திர மண்டலங்களை
பொட்டலம் போடும்
விளையாட்டில்
மும்முரமாய் இருக்கும்
இளந்தளிர்கள்
அந்த மணலில்
கனவு மரங்களை
நட்டு
வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அங்கு நடப்பது
வாழ்க்கைக்கு ஒத்திகையா?
அல்லது
வாழ்க்கையையே ஒத்திவைப்பதா?
துடிக்கும் மீன்களுக்கு அந்த‌
தூண்டிற்பொன்னை அங்கே வீசியது யார்?

============================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக