இருமுகன்
=======================================ருத்ரா
(விமரிசனம்)
அன்னியன் தெய்வத்திருமகள்
படங்களுக்கு பிறகு
கிளம்பியிருக்கும் நடிப்பின் புயலை
தன் மூச்சு ஆக்கியிருக்கிறார் விக்ரம்.
நடிப்பில் என்னென்ன வகை
இருக்கிறது
என்பதை இவர் எழுதிக்காட்ட
அவருக்கு கிடைத்த சிலேட்டு
இந்த வெள்ளித்திரையே.
ஒரு உலகம் தான் இருக்கிறது,
ஆனால் இரண்டு உலக நாயகன்கள்
எப்படி வந்தனர்?
நம் தமிழ் நாட்டுக்குக்கிடைத்த
கனமான பெருமிதம் இது.
ஒரு ஆண் நடிகர் பெண் வேடம்
போடுவது போல் இல்லை இது.
ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத
ஆனால்
உயிர்ப்பும் துடிப்பும் தளும்பும்
பாத்திரத்தை தாங்க
ஒரு உயரிய திறமை வேண்டும்.
கைகளை குழைய குழைய உருட்டி
முகமெல்லாமே உதடுகள் ஆக்கி
மின்னல் போல் சிரிப்புக்கீற்றை
தொட்டுக்காட்டி அசத்தியிருக்கிறார் விக்ரம்!
இப்படி பெண்"ணீயம்" பூசிக்கொண்டவர்
சண்டைக்காட்சிகளில்
எப்படி
நரம்பு புடைக்கிறார் என்று
நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
விக்ரம் சாதித்துக் காட்டியிருக்கிறார்.
நடிப்பில்
ஏற்கனவே இமயம் ஏறியவர்
இன்னொரு இமயத்தை அதன் உச்சியிலிருந்து
ஏறி வானத்தை வருடியிருக்கிறார்.
புதிய முறையில்
ஒரு விஞ்ஞானக்கதையை
படம் ஆக்கி வெற்றி கண்ட
இயக்குநருக்கு பாராட்டுகள்.
நயனதாராவின் நிழல் வந்து போனாலே போதும்
அத்தனை "குட் வில்" குவித்து வைத்திருப்பவர்.
எனவே
அந்த அழகிய பொம்மை
இமையை கூட சிமிட்ட வேண்டாம்.
அவரது அழகே நடிப்பு.
ஆனாலும்
இந்த பொம்மை
திடீரென்று விழித்துக்கொண்டு
சந்தேகம் கொண்டு சீறும்
அந்த ஆவேசக்காட்சி ஒன்றே போதும்
அந்த "எவ அவ" வசனத்தில்
வித்தியாசமான "வெடி வேலுவாய்"
வெளுத்து வாங்குகிறார்.
மேலும் படத்தில் வரும்
நித்யா மேனன்
கதையின் அடர்த்தியையும் சேர்த்து
சுமக்கவேண்டியிருக்கிறது.
நன்றாகவே நடித்து இருக்கிறார்.
திருநங்கைக்குள் ஒரு திருநங்கனா?
திருநங்கனுக்குள் ஒரு திருநங்கையா?
விறு விறுப்பில்
இந்த கேள்வியே விரவிநிற்கிறது.
====================================================
=======================================ருத்ரா
(விமரிசனம்)
அன்னியன் தெய்வத்திருமகள்
படங்களுக்கு பிறகு
கிளம்பியிருக்கும் நடிப்பின் புயலை
தன் மூச்சு ஆக்கியிருக்கிறார் விக்ரம்.
நடிப்பில் என்னென்ன வகை
இருக்கிறது
என்பதை இவர் எழுதிக்காட்ட
அவருக்கு கிடைத்த சிலேட்டு
இந்த வெள்ளித்திரையே.
ஒரு உலகம் தான் இருக்கிறது,
ஆனால் இரண்டு உலக நாயகன்கள்
எப்படி வந்தனர்?
நம் தமிழ் நாட்டுக்குக்கிடைத்த
கனமான பெருமிதம் இது.
ஒரு ஆண் நடிகர் பெண் வேடம்
போடுவது போல் இல்லை இது.
ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத
ஆனால்
உயிர்ப்பும் துடிப்பும் தளும்பும்
பாத்திரத்தை தாங்க
ஒரு உயரிய திறமை வேண்டும்.
கைகளை குழைய குழைய உருட்டி
முகமெல்லாமே உதடுகள் ஆக்கி
மின்னல் போல் சிரிப்புக்கீற்றை
தொட்டுக்காட்டி அசத்தியிருக்கிறார் விக்ரம்!
இப்படி பெண்"ணீயம்" பூசிக்கொண்டவர்
சண்டைக்காட்சிகளில்
எப்படி
நரம்பு புடைக்கிறார் என்று
நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
விக்ரம் சாதித்துக் காட்டியிருக்கிறார்.
நடிப்பில்
ஏற்கனவே இமயம் ஏறியவர்
இன்னொரு இமயத்தை அதன் உச்சியிலிருந்து
ஏறி வானத்தை வருடியிருக்கிறார்.
புதிய முறையில்
ஒரு விஞ்ஞானக்கதையை
படம் ஆக்கி வெற்றி கண்ட
இயக்குநருக்கு பாராட்டுகள்.
நயனதாராவின் நிழல் வந்து போனாலே போதும்
அத்தனை "குட் வில்" குவித்து வைத்திருப்பவர்.
எனவே
அந்த அழகிய பொம்மை
இமையை கூட சிமிட்ட வேண்டாம்.
அவரது அழகே நடிப்பு.
ஆனாலும்
இந்த பொம்மை
திடீரென்று விழித்துக்கொண்டு
சந்தேகம் கொண்டு சீறும்
அந்த ஆவேசக்காட்சி ஒன்றே போதும்
அந்த "எவ அவ" வசனத்தில்
வித்தியாசமான "வெடி வேலுவாய்"
வெளுத்து வாங்குகிறார்.
மேலும் படத்தில் வரும்
நித்யா மேனன்
கதையின் அடர்த்தியையும் சேர்த்து
சுமக்கவேண்டியிருக்கிறது.
நன்றாகவே நடித்து இருக்கிறார்.
திருநங்கைக்குள் ஒரு திருநங்கனா?
திருநங்கனுக்குள் ஒரு திருநங்கையா?
விறு விறுப்பில்
இந்த கேள்வியே விரவிநிற்கிறது.
====================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக