புதன், 28 செப்டம்பர், 2016

மூடு







மூடு
=============================ருத்ரா இ பரமசிவன்

விடியல் பற்றி
விடிய விடிய பேசினார்கள்.
மக்களுக்கு
விடிய மறுத்தால் என்ன
சிசேரியன் செய்து விடலாம்
என்று ஒரு கவிஞன்
புதுக்கவிதை சொன்னான்.
மக்களுக்கு வரலாறு தெரியவேண்டும்
அரசியலின் பொருளாதாரம்
தெரிகிறதே தவிர‌
பொருளாதாரத்தின் அரசியல்
தெரியவில்லையே.
காந்திகள் எத்தனையோ ஒலித்தாலும்
புன்னகை காட்டும் காந்தியை மட்டும்
இவர்கள் மறப்பதில்லையே.
அரட்டையாய் மாறி
அறையே கலகலத்தது.
ஒரு வழியாய் தூங்கிப்போனார்கள்.
ஒருவன் மட்டும் மொட்டு மொட்டு
என்று தூங்காமல் காத்திருந்தான்.
"ஏண்டா"
என்றான் மற்றொருவன்.
"அவள் நாளை மதியம் இந்நேரம்
பஸ் ஸ்டாப்புக்கு வரும் நேரமடா!
என்றான் அவன்.
"சரி..அதற்கு தூங்கினால் தானே
கனவில் நீ சந்திப்பாய்?"
"அது அப்படியில்லைடா
இது விழித்திருந்தே
தனித்து இனித்திருந்தே
காணும் கனவுடா !"
"எப்படியோ போ"
இவன் கொட்டாவியில்
சுருங்கி மடிந்து கோண்டான்.

காலைச்சூரியன்
சுள்ளென்று
சன்னல் வழியே
வரிப்புலியாய்
கம்பி நிழல்களை
சூடு போட்டு எழுப்பினான்.
"யாரப்பா சன்னலை திறந்தது?
மூடு
தூக்கம் கலஞ்சு போச்சே"
முனகியது அந்த புதுக்கவிஞன் தான்.

==============================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக