செவ்வாய், 13 செப்டம்பர், 2016

நா.முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம்புகைப்படம் ..நன்றி..."விக்கிபீடியா "   https://en.wikipedia.org/wiki/Na._Muthukumar

நா.முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம் 


அடுத்த பருப்பு நான் தாண்டா
===========================================ருத்ரா இ பரமசிவன்
மூன்றாவது சாளரம் (2)
(இது நா.முத்துக்குமார் வானம்)
அடுத்த பருப்பு நான் தாண்டா
என்ற பாட்டு
"ரெண்டாவது படம்" என்ற படத்துக்கு
அவர் எழுதிய பாட்டு.

சினிமா ஆசையில் அலப்பறை செய்யும்
அந்த லொள்ளு பாட்டில்
அவர் பொ(ய்)ம்மை உலக பிம்பங்களுக்கு
கொடும்பாவி கட்டி நையாண்டித்தீ வைத்து
இழுத்துக்கொண்டு போகிறார்.

அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கும்
அற்பத்தனமே இங்கு
"வெண் கொற்றக் குடை" பிடிக்கிறது.
ஜிகினாவும் அரிதாரமுமே
மக்கள் பொங்கி சாப்பிடும்
அரிசியும் பருப்பும் ஆன அவலமே
இங்கு
சினிமா ஆசைத்தீப்பிடித்து எரிகிறது.

"நான் கை துடைத்தா செக்கு புக்கும்
டிஷ்யூ ஆகும்டா"
செக்கு புக்குகள்
அப்படி டிஷ்யூக்கள் ஆன‌
வஞ்சகக்காட்டில்
புதைந்து போய் விட்ட‌
கவிஞனின் அந்த வரிகள்
பொய்க்கோட்டைகளில் கட்டி மிதக்கின்ற‌
ராட்சசக்குமிழிகளை
உடைத்து நொறுக்குகின்றன.

""கண்ணா..கிறுக்கு மூதேவி..
ஆனந்த கண்ணா
கண்ணா வரந்தா நீ
மன்னா..."

சினிமாப்புகழ்
போதை நுரைப்பில்
சொற்களின்
தடம் புரளல் மூலம்
சமூகத்தடம் ஒரு அதிர்ச்சி
ஒத்தடம் கொடுத்து
அதிரடி மருத்துவம் செய்ய வேண்டிய
நிலையில் இருப்பதை
துல்லியமாக எழுதுகிறார்.

இப்படி
இவருக்குள்
ஒரு மூன்றாவது நெற்றிக்கண்
சுட்டெரித்துக்கொண்டிருப்பதை
தனியாக திறந்து பார்த்து
வெளிச்சம் பெறுவதே
இந்த மூன்றாவது சாளரம்.

===============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக