செவ்வாய், 27 செப்டம்பர், 2016

என் மனதை பிய்த்துப்போட்டு
என் மனதை பிய்த்துப்போட்டு
=====================================ருத்ரா இ பரமசிவன்

என் மனதை பிய்த்துப்போட்டு
வர்ணம் குழப்பினேன்
பிக்காஸோ என்றார்கள்.
என் எழுத்தை
தலைவேறு கால்வேறு ஆக்கி
உள்ளே ஒரு சூன்யம் வைத்து
பஞ்சுமிட்டாய் சொல்லில்
தீயை அருந்தச்சொன்னேன்
புதுக்கவிஞன் ஆக்கி
மகுடம் சூட்டினார்கள்
நடைபாதையில்
ஒரு மனிதன் கந்தலாய்
கிடந்தான்
கவிதையாய் ஓவியமாய் மனிதமாய்!
அவனை
அரியணையில்
அமர்த்த எண்ணினேன்.
ஒட்டுமொத்தமாய்
நம் ஜனநாயகமாய்
காட்சி தந்தான்.
வாருங்கள்
கைத்தாங்கலாய்
அவனை அமர வைப்போம்
என்றேன்.
யாரும் வருவாரில்லை
============================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக