ஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா!
=============================================ருத்ரா இ பரமசிவன்
இந்த
நாட்டின் முதுகெலும்பு
நீங்கள் டிசைன் செய்தது.
இளைஞர்களின் மூளை
நீங்கள் பதியம் இட்டது.
நீங்கள்
அகர முதல
ஒலித்துக்காட்டியபின்
எங்கள் அறிவு
நீளமாயும் அகலமாயும்
ஆழமாயும்
பாய்ந்து சென்றது.
உங்கள் கையில்
சாக்பீசும் பிரம்பும்
இருந்தாலும் கூட
அதில்
சங்கு சக்கரம்
ஏந்தியவன் தான்
எங்களுக்கு காட்சி தந்தான்.
குரு என்னும்
சுடரேந்தியாய்
நீங்கள்
வெளிச்சம் தந்ததால் தான்
உங்களுக்கு பின்னால் இருப்பவனின்
முகம் தெரிந்தது.
மாதா பிதா குரு..
அப்புறம் தானே தெய்வம்!
வெளிச்சம்
எல்லோருக்கும்
கிடைத்ததால் தானே
எங்களுக்கு
இந்த வர்ணங்களும் புரிந்தன.
இந்த இருட்டும் புரிந்தது.
இருப்பினும்
ஒரு கேள்வி.
ஒரு சமன்பாடு ஒன்றை எழுதி
தீர்வு எழுதி கொண்டுவரச்சொன்ன
அந்த ஹோம் ஓர்க்
இன்னும் ஹோம் ஒர்க் ஆகவே
இருக்கிறது!
மக்கள் இஸ் ஈக்குவல் டு ஜனநாயம்
என்பதே அந்த சமன்பாடு.
பொதுவான மக்கள் ஒரு சுநாமி.
அதில்
தனியான “ஒரு”மக்கள் யார்?
ஏனெனில்
நாங்கள் வெளிச்சம் என்று நினைத்து
அறுபத்தைந்து ஆண்டுகளாய்
ஜனநாயகத்தை விதைக்கிறோம்.
மகசூல் என்று பெறுவதோ
பேரிருள் தான்.
நீங்கள் எழுதிக்கொண்டு வரச்சொன்ன
தீர்வு
உங்களிடமாவது இருக்கிறதா?
தெரியவில்லை.
ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த ஆச்சரியம் தான்
“ஆச்சார்ய தேவோ பவா”வா?
===============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக