சனி, 10 செப்டம்பர், 2016

டாக்டர் நா.முத்துக்குமார் அவர்களே..


https://upload.wikimedia.org/wikipedia/commons/1/14/%E0%AE%A8%E0%AE%BE.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.JPG
புகைப்படத்துக்கு நன்றி.

டாக்டர் நா.முத்துக்குமார் அவர்களே..
===============================================ருத்ரா


பேனாவைக்கொண்டு
இதயம் துடிக்க வைத்தது
உங்கள் வித்தை.

இசைக்கருவிகளின் தீனியிலும்
இனிய இலக்கியம் புகட்டியது
உங்கள் வித்தை.

நிழலைக்கொண்டு ஒளியின்
நாடி பிடித்து காதல் சொன்னது
உங்கள் வித்தை.

இருபத்தியொன்றாம் நூற்றாண்டின்
இளைஞர் அலைகளுக்கு மூக்கணாங்கயிறு
உங்கள் வித்தை.

தமிழ் எழுத்துக்குள் முத்துக்குளித்து
நா.முத்துக்குமாராய் தினம் தினம்
சூரிய உதயமாய் சோம்பல் முறிப்பது
உங்கள் வித்தை.

சினிமா நரம்புகளில் மின்னல் பாய்ச்ச‌
மின்சார குதிரையாய் பாய்ந்து வரும்
உங்கள் பேனாவே
உங்கள் வித்தை.

கருப்பையில் இருக்கும் பெண்சிசுவின்
கைவிரல் விரித்துப்பார்த்தால்
செல் இருக்கும்.
அதனுள்ளும் டெக்ஸ்ட் இருக்கும்
உங்கள் வரியின் கர்ப்பம் சுமந்து..
அது உங்கள் வித்தை.

யாரோ
பிரம்மனாமே!படைப்பவனாமே!
தேடுகிறார்கள் அவனை
நீங்கள் உதறிய பேனா மைத்துளிகளில்
அதுவே உங்கள்
பிரம்மாண்டவித்தை.

தமிழின் வித்தகரே!
வாழ்க!வாழ்க!நீவிர்
பலப்பல‌
"பல்லாண்டு"

=========================================================
கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதை
முன்னிட்டு நான் கூகிள் குழும மடல்களில் டிசம்பர் 15,2014 அன்று எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக