செவ்வாய், 16 ஜனவரி, 2018

கேள்வி

கேள்வி
=====================================ருத்ரா

கடின பாறையிடுக்கில்
தலை நீட்டும்
 ஒரு பச்சைத் தளிர் அது.

தியானம் என்று
கண்ணை  மூடிக்கொண்டாலும்
எங்கிருந்தோ வரும்
மின்னல் அது.

ஆயிரம் பக்கங்கள்
எழுதினாலும்  படித்தாலும்
ஆயிரத்தொன்றாவதன்
ஒரு ஊற்றாய்
பீறிடும் அது.

அந்தி வண்ணத்தின்
தூரிகை விளாறுகளில்
எங்கோ ஒரு
இளங்கீற்றின்  பிசிறு போல
கவிஞனின் கடைசி எழுத்தை
முத்தமிடக் கேட்கும்
ஒரு தாகம்  அது.

யுத்தக்கடலில்
ரத்தங்களின் சத்தமாய்
மூழ்கி விட மறுத்து
ஒரு எரிமலைக்  குதப்பலை
கருவுயிர்த்து
உமிழ்ந்து காட்டும்
இன  எழுச்சி அது!

அகர முதல என்று
உரக்க குரலெழுப்பி
உலகை உலுக்கிவிடத்
துடிக்கும்
துடிப்பு அது!

========================================================







2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

அருமை இரசித்தேன் கணையின் மறுபுறத்தை...

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

நீங்கள் ரசித்தது அறிந்து மகிழ்ச்சி.
கேள்வி கேட்கும் தமிழையே நாளை உலகம் கேட்கும்.

கருத்துரையிடுக