ஞாயிறு, 7 ஜனவரி, 2018

கடவுள்.

வெங்காயோபநிஷதம்
=============================================ருத்ரா

குழம்புபவர்கள்
குழப்புபவர்கள்
இவர்கள்
சொல்லாடலில்
ஜனித்த குழந்தையே
கடவுள்.

அன்றைய ரிஷிகள்
சோமச்செடியை நசுக்கிய‌
சோமபானத்தில் தான்
கடவுளை தர்சித்தார்கள்.

இன்றைக்கும்
ஒரு போதையே
கோவில்களுக்குள்
மக்கள் எனும்
மந்தைகளை
இழுத்துச்செல்கிறது.

அகரம்
உகரம்
மகரம்
கடைந்து கடைந்து
ஒலிப்பது
ஓம்
என்றார்கள்.

அதற்குள்
ஒரு கரும்பு பிழியும் எந்திரம்
இருக்கிறது.
அதில் உங்களை
கசக்கிப்பிழிந்து
அந்த இனிப்பை
பருகுங்கள் என்றார்கள்.

இந்த வேதங்கள்
வறட்டு த் தவளைகள் போல
கத்துகின்றன
என்று
ஒரு தவளை
முனிவன் ஆகி
சில வரிகளை மற்றுமே
ஒலிப்பித்தது.
தவளை போல உடற்குறையுடன்
இருந்திருப்பான் அந்த ஞானி
அதனால்
அவன் பெயர் மண்டூகன்.
அவன் படைத்ததே
மாண்டூக்யோபநிஷதம்.

அடிப்படையான
ஞான இதழ் களை
உரித்துக்கொண்டே போனால்
அதுவும்
"வெங்காயத்தை உரிப்பது போல்
இறுதியில்
ஒரு வெறுமையில் தான் முடியும்.
அதனால் தான்
நம் "வெண் தாடி" வேந்தர்
அடிக்கடி
"வெங்காயம் வெங்காயம்"
என்கிறார் போலும்!

சரி
மாண்டூக்யோபநிஷதம்  எனும்
அந்த வெங்காயோபநிஷத்தின்
உரித்து உரித்து முடித்த
இறுதி வரிகளைப்பார்ப்போம்.

நாந்தஹ ப்ரக்ஞம்  ந பஹீஹ ப்ரக்ஞம் நோப்யதஹ  ப்ரக்ஞம்
ந  ப்ரக்ஞானகனம்  ந ப்ரக்ஞம்  நா (அ )ப்ரக்ஞம் .
அத்ருஷ்டம்   அவ்யவஹார்யம்  அக்ராஹ்யம்  அலக்ஷணம்
அசிந்த்யம்  அவ்யபதேஸ்யாம்

(வெங்காயம் கண் கரிக்கிறது அல்லவா
அப்புறம் தொடர்வோம்..)

==================================================
 






3 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

தொடக்க வரிகளே அதிரடி தொடர்கிறேன்...

Massy spl France. சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Massy spl France. சொன்னது…

எல்லாம் நுழைந்தது சார். கடைசி வால் மட்டும் நுழைய மறுக்கிறது.

தமிழனின் மூளையை கவ்வி சூழ்ந்து கொண்டு சுயமாக தையரித்துடன் சிந்தித்து முன்னேர விடாமல் தடுக்கும் மத பித்தத்தில் இருந்து விடுதலை வேண்டும்.

பகிர்ந்தமைக்கு நன்றி.

கருத்துரையிடுக