புதன், 10 ஜனவரி, 2018

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
=============================================செங்கீரன்

பொங்கல் திருநாளும்
தமிழ்ப்புத்தாண்டும்
ஒட்டிக்கொண்டு தானே வருகிறது.
என் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
எல்லொருக்கும்.

இன்னுமா இது
உங்களுக்கு சூத்திரனின் புத்தாண்டு?
வாய்க்குள் விரலை விட்டு
ஓங்கரிக்கும்
அந்த சமஸ்கிருதப்பெயர்களை
வைத்துக்கொண்டு
சர்க்கரைப்பொங்கல் வைப்பவர்களே!
கொஞ்சம் சிந்தியுங்கள்.
தமிழன்
எழுச்சியுற‌
விழுச்சி பெற‌
வந்ததே இந்த தமிழ்ப்புத்தாண்டு.
"பழக்க"தோஷம்"
எனும் நோய்
இன்னுமா உங்களை விட்டு நீங்கவில்லை?
உங்கள் கணினியை
மடியில் வைத்து கருவுற்று
அந்த சமஸ்கிருதப்பேரை
தேடி தேடி
உங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டுகின்றீர்களே !
எளிதாக சுருக்கமாய் இருக்கவே
அப்படி பெயர் வைப்பதாய்
சிலர் சொல்கிறார்கள்.

இதற்கு
ச்சூ ..சூ ..ட்ரியோ  டிர்ர்..
பா பா பா..
கொக்..கொக்..
கா கா ...
மியா மியா
இப்படியெல்லாம் கூட‌
பெயர் வைக்கலாம்.

வாயில்லாத
அந்த ஆடு மாடு
கோழி காக்கை பூனைகளை
கூப்பிடுவதைப்போல கூட
பேர் வைக்கலாமே!

என் இனிய தமிழ் நண்பர்களே
தமிழின் இன்னொலி
கேட்கப்படாத
ஒரு பாலைவனம் ஆகிடுமோ
என்ற அச்சத்தில் தான்
இந்த மனக்குமறல்.

வான "சாஸ்திரத்தையும்"
"வாக்கிய" கணித
பஞ்சாங்கங்களையும்
வராக மிஹிரர்களையின்
ஆர்ய பட்டாக்களையும்
கஷ்டப்பட்டு முன் வைத்து
தமிழ் "வருஷத்தின்"
அந்தப்பெயர்களுக்கு
சப்பைக்கட்டு செய்பவர்களே
ந‌ம்
எட்டுத்தொகையையும்
பத்துப்பாட்டையும்
ஏன் மறந்து போனீர்கள்?

தமிழ் மண்ணின்
உயிரும் மூச்சும்
இழந்து
பொருள் புரியா
மந்திரங்களுக்குள்
மறைந்து கிடப்பவர்களே!
உங்கள்
விடுதலை எப்போது
இனிய தமிழ்ச்சொல்லாக‌
ஒலிப்புயல் ஆகி
உலா வருகிறதோ....

அதுவே நம் இனிய புத்தாண்டு.
அதுவே நம் பொங்கல் புத்தாண்டு.



2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

அறிந்தேன் விடயம் நன்று நன்றி

Massy spl France. சொன்னது…

நண்பர் ருத்ரா, உங்களுக்கும் சுற்றத்தாருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் இனிய பொங்கள் வாழ்த்துக்கள்.

எப்போதும்போல் உமது சித்தத்தில் அலையாக அலையாக பொங்கி எழும் வீரிய எண்ண முத்துச் சிதறல்களை தொடர்ந்து கொடுத்து வரவும்.

நன்றி.

கருத்துரையிடுக