எங்கோ ஒரு உயரத்தில் விஜய்சேதுபதி!
====================================================ருத்ரா
"ஒன் இந்தியா தமிழ்"
கருத்துக்கணிப்பில்
76 சதவீதத்தையும் தாண்டி
ரசிகர்களைக் கவர்ந்த
நடிகராய்
விஜயசேதுபதி
உயர்ந்து நிற்கிறார்.
"ஸ்டார் வேல்யூ" என்ற
ஈய முலாம் பூசப்பட்ட
படங்களை விட
கதைக்குள் ஒரு சமுக ப்ரக்ஞயை
எந்த அளவுக்கு
கொளுத்திப்போடுகிறார்கள்
என்பதைப்பொறுத்தே
படம் முழுதும்
ஒரு "ஸ்டார் வேல்யூ"
வைரத்தின் ஒளிப்பட்டைகளை
கதிர் வீசுகிறது.
அந்த வகையில்
2017ல் விஜயசேதுபதியின்
விக்ரம் வேதா வும்
புரியாத புதிரும்
அவரை
உச்சத்தில் கொண்டுபோய்
வைத்து விட்டன!
அது சரி?
ஒரு பாரம்பரிய
நாற்காலி ஒன்றில்
"கடல் நுரை" போல்
நரைத்து விட்ட
தன் முழுச்சிகையில்
"சீதக்காதியின்"
"முதல் கண் வீச்சை"
(ஃபர்ஸ்ட் லுக்)
தெறிக்கவிட்ட
அந்த அமர்த்தலான அமர்வு
எத்தனை எத்தனை
அலைகளை
எழுப்பி விட்டிருக்கிறது!
பெரிய நடிகர்கள் எல்லாம்
கருப்பு வெளுப்பில்
"சால்ட் பெப்பர்"
காக்டெயிலுக்கு தாவி விட்டபோது
இவர் மட்டும்
முழு வெள்ளி ஜரிகைக்கூடமாய்
அள்ளித்தருகிறாரே
ஒரு கம்பீரத்தை!
அதை என்னென்பது?
நடிகர் திலகத்தின்
"எங்க ஊர் ராஜா" போல
யாரை நம்பி நான் "நடித்தேன்"
போங்கடா! போங்க!
என்பது போல் அல்லவா இருக்கிறது.
இவரது ஒவ்வொரு படமும்
"நவராத்திரியின்" நவ ரசங்களையும்
பிழிந்து ஊற்றுகிறது.
நடிப்பின் "ஊற்று" அல்லவா.
வற்றாத நடிப்புச்சுரங்கம் இவர்.
இவரது
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை
அன்புடன் நாம்
பொழிவோமாக!
======================================================
====================================================ருத்ரா
"ஒன் இந்தியா தமிழ்"
கருத்துக்கணிப்பில்
76 சதவீதத்தையும் தாண்டி
ரசிகர்களைக் கவர்ந்த
நடிகராய்
விஜயசேதுபதி
உயர்ந்து நிற்கிறார்.
"ஸ்டார் வேல்யூ" என்ற
ஈய முலாம் பூசப்பட்ட
படங்களை விட
கதைக்குள் ஒரு சமுக ப்ரக்ஞயை
எந்த அளவுக்கு
கொளுத்திப்போடுகிறார்கள்
என்பதைப்பொறுத்தே
படம் முழுதும்
ஒரு "ஸ்டார் வேல்யூ"
வைரத்தின் ஒளிப்பட்டைகளை
கதிர் வீசுகிறது.
அந்த வகையில்
2017ல் விஜயசேதுபதியின்
விக்ரம் வேதா வும்
புரியாத புதிரும்
அவரை
உச்சத்தில் கொண்டுபோய்
வைத்து விட்டன!
அது சரி?
ஒரு பாரம்பரிய
நாற்காலி ஒன்றில்
"கடல் நுரை" போல்
நரைத்து விட்ட
தன் முழுச்சிகையில்
"சீதக்காதியின்"
"முதல் கண் வீச்சை"
(ஃபர்ஸ்ட் லுக்)
தெறிக்கவிட்ட
அந்த அமர்த்தலான அமர்வு
எத்தனை எத்தனை
அலைகளை
எழுப்பி விட்டிருக்கிறது!
பெரிய நடிகர்கள் எல்லாம்
கருப்பு வெளுப்பில்
"சால்ட் பெப்பர்"
காக்டெயிலுக்கு தாவி விட்டபோது
இவர் மட்டும்
முழு வெள்ளி ஜரிகைக்கூடமாய்
அள்ளித்தருகிறாரே
ஒரு கம்பீரத்தை!
அதை என்னென்பது?
நடிகர் திலகத்தின்
"எங்க ஊர் ராஜா" போல
யாரை நம்பி நான் "நடித்தேன்"
போங்கடா! போங்க!
என்பது போல் அல்லவா இருக்கிறது.
இவரது ஒவ்வொரு படமும்
"நவராத்திரியின்" நவ ரசங்களையும்
பிழிந்து ஊற்றுகிறது.
நடிப்பின் "ஊற்று" அல்லவா.
வற்றாத நடிப்புச்சுரங்கம் இவர்.
இவரது
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை
அன்புடன் நாம்
பொழிவோமாக!
======================================================
2 கருத்துகள்:
எமது வாழ்த்துகளும்...
இந்த சதவீதம் அதிகமானால் தமிழக முதல்வரே வருக என்ற கோஷமும் வருமே... (வெட்டி வீரர்களிடமிருந்து)
ஆமாம் வருங்காலத்தில் "கோடம்பாக்கமே" கோட்டையாகிப்போய் விடுமோ? சினிமா அரக்கனா? தேவனா?
கருத்துரையிடுக