"அர்த்தம் தேடி...."
===================================================ருத்ரா
காலையில் நாலு அம்பத்தஞ்சுக்கு
கண் விழித்து
படுக்கை சுருட்டி வைத்து
டாய்லெட் போய்
முகம் கழுவி
உப்பு இருக்கிறதா உப்பு இருக்கிறதா
என்று தொண தொணத்த அந்த விளம்பர ஓசைகளே
நாராசாமாய் துரத்த
டூத் பேஸ்ட் பிதுக்கி பல் விளக்கி
மைக்ரோ ஓவனில்
பால் சூடு செய்து ப்ரூ கலக்கி
கோப்பையில் பெய்து
அதைக் கைப்பிடித்து
ஹாலுக்கு வந்து
நாற்காலியில் உட்கார்ந்து
உட்கார்ந்து கொண்டே
விரலையும் மூக்கையும் வைத்து
மணிபூரகம் ரேசகம் கும்பகம்
என்று
மூச்சுகளோடு
கிச்சு கிச்சு தாம்பாளம் கியா கியா தாம்பாளம் ஆடி
ஒரு வழியாய்
காப்பியின் கடைசிச்சொட்டோடு
என் அன்றாட தொப்பூள் கொடியின் முடிச்சை போட்டு
நிமிர்ந்த பிறகு
அவசரம் அவசரமாய்
புரட்டுகிறேன் அகராதியை
வாழ்க்கையின் அர்த்தம் தேடி....
=========================================================
13 ஏப்ரல் 2015 ல் எழுதியது.
===================================================ருத்ரா
காலையில் நாலு அம்பத்தஞ்சுக்கு
கண் விழித்து
படுக்கை சுருட்டி வைத்து
டாய்லெட் போய்
முகம் கழுவி
உப்பு இருக்கிறதா உப்பு இருக்கிறதா
என்று தொண தொணத்த அந்த விளம்பர ஓசைகளே
நாராசாமாய் துரத்த
டூத் பேஸ்ட் பிதுக்கி பல் விளக்கி
மைக்ரோ ஓவனில்
பால் சூடு செய்து ப்ரூ கலக்கி
கோப்பையில் பெய்து
அதைக் கைப்பிடித்து
ஹாலுக்கு வந்து
நாற்காலியில் உட்கார்ந்து
உட்கார்ந்து கொண்டே
விரலையும் மூக்கையும் வைத்து
மணிபூரகம் ரேசகம் கும்பகம்
என்று
மூச்சுகளோடு
கிச்சு கிச்சு தாம்பாளம் கியா கியா தாம்பாளம் ஆடி
ஒரு வழியாய்
காப்பியின் கடைசிச்சொட்டோடு
என் அன்றாட தொப்பூள் கொடியின் முடிச்சை போட்டு
நிமிர்ந்த பிறகு
அவசரம் அவசரமாய்
புரட்டுகிறேன் அகராதியை
வாழ்க்கையின் அர்த்தம் தேடி....
=========================================================
13 ஏப்ரல் 2015 ல் எழுதியது.
3 கருத்துகள்:
பலரது நிலைப்பாடு இப்படித்தான் நண்பரே...
(கீழே வருடத்தை சரி செய்க)
மிக்க நன்றி அன்பின் திரு.கில்லர்ஜி அவர்களே...
வருடத்தை சரி செய்ய சொல்லி நீங்கள் எழுதியதைக்கண்டு சரிசெய்யப்போகுமுன் அந்த வருடத்தைப்பார்த்ததும் குபுக்கென்று சிரித்து விட்டேன்.
20145 ல்
என் நம் நிலைமை.
கி.பி கி.மு மாதிரி
த.பி த.மு ஆகிவிடுமோ
என்று
என் சிறுபிள்ளைத்தனமான
அல்லது
கிறுக்குத்தனமான
பேராசையாய் அது இருந்தது.
அதாவது
த மு என்றால்
தமிழனாய் வாழ்வதற்கு முன் என்றும்
த.பி என்றால்
தமிழனாய் வாழ்வத்ற்கு பின் என்றும்
அந்த த.பி 20145
எப்படியிருக்கும்?
ஆம்.
நம் தமிழனின் கனவு
அவ்வளவு நீளமானது!
=================================ருத்ரா
மறுபடியும் ஒரு பிழை நண்பரே!
"என்ன நம் நிலைமை?"
என்று தட்டுவதற்குள்
"என் நம் நிலைமை"
என தடுக்கி விழுந்து விட்டது.
கருத்துரையிடுக