விஜய் என்றால்
வெற்றி என்று பொருள்
என்று சமஸ்கிருதத்துக்கு
சுலோகங்களில்
குடை பிடித்துக்கொண்டிருக்கும்
விஜய்யால்
தமிழுக்குத் துரோகம்.
தமிழுக்குத் தோல்வி.
அந்த "வடச்சாய்வில்"
தமிழே
குடை சாய்ந்து கொண்டிருப்பதில்
இங்கே யாருக்கும் வருத்தமில்லை.
வெட்கமில்லை.
இதில் விஜய்கள்
படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
தமிழர்கள் தூங்கும் வரை
தமிழுக்கு விடுதலையில்லை.
எழுச்சி கொள் தமிழா!
கடவுளை எழுப்ப நீ
திருப்பள்ளியெழுச்சி பாடுவதில்
நீ
திரும்ப திரும்ப முட்டாள் என்று தான்
புல்லரித்துக்கொண்டிருக்கிறாய்.
தமிழே இங்கு விழிக்க வேண்டும்.
அதனால் தமிழா எழு!
_________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக