அலை விரிப்போம் அதிர வைப்போம்
புதியதோர் "பார்வைக்களம்"
திறந்து வைப்போம்.
செயற்கை மூளைத்தோட்டத்துள்
இயற்கை மூளைச் சிந்தனைக்கனி
இயல்பாய்ச் சுவைப்போம்
வாரீர் வாரீர்.
வைப் வைபவம் எனும்
தமிழ்ப்பேராறு "கோடிங்க்" ஓட்டம்
"கல் பொருதிறங்கும்"
கணியன் பூங்குன்றன் கணிப்பொறியுள்ளே
நுழைவோம் வாரீர்.
யாவரும் கேளிர்.யாவரும் கேளீர்.
______________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக