ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு
அஞ்சலி
_________________________________________
ஈரோடு தமிழன்பன் எனும்
தமிழ்ச்சூரியன்
நம் இதய மலைகளில்
உறங்கப்போனானோ?
உயிர்க்கப்போனானோ?
நாளை ஓர் கவிதை அந்த
சூரியனுக்கும் முன்னெழுந்து
மூண்டு தருவானோ?
தினம் தினம் இனி அந்த
சூரியனாய் கனல்வீசி
தமிழ்க்கனல் பொங்கிடவே
பொங்கல் விழா காண தன்
உளம் அங்கே சொல் பரப்பி
சுடர் பூத்து வருவானோ?
ஈரோடு இனி உன் திருப்பெயரே
ஆகி விடும் தமிழ் ஒளியில்!
அகர முதல என
ஒலி பிறக்கும் ஏடெல்லாம் உன்
வீடாகும் நாடாகும் மறவோமே தமிழன்ப!
மறவோமே மறவோமே நாம்.
__சொற்கீரன்__
22.11.25
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக