அவர்கள் யார்?
எவர்களைக் கேட்கிறீர்கள்?
அட..அவர்களைத்தானய்யா?
அவர்களைன்னா?
அதாங்க...
கால் கடுக்க நின்னு
க்யூவிலே வந்து
ஓட்டுப் போடுவாங்களே
அவங்களையா?
ஓ..அதுகளையா?
என்னங்க அஃறிணையில
சொல்றீங்க?
அது தான் ஏற்கனவே
51 சதவீதத்துக்கும் மேலெ
அல்காரிதம் பண்ணி
வச்சுட்டாங்களே...
வெறும் உயிரற்ற எண்ணிக்கையை
எப்படிங்க சொல்றது?
______________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக