சனி, 29 நவம்பர், 2025

அகழ்நானூறு..106

 

அகழ்நானூறு..106

___________________________________________

சொற்கீரன்



மாங்குடி மருதன் அன்று ஓலை கீறினான்.

ஒரு சொல் கருவின் உருவு திறந்தான்.

உப்பு என்றலே உள்ளுவது உப்பி

உயர்தலே ஆகும் அறிவீரே.

காட்டின் வன்சுரம் கடுவரி எழுதி

கொன்று தின்றவன் நின்று அவிந்தான்

நெடுமுனை சித்தம் ஓர் வெளி காட்ட‌

ஓர்ந்து ஒளிர்ந்து உயர்வழி காண்டல் 

அற்றே மனிதர்க்கு உருவென ஒரு

"நியாந்தர் தாழ்" நிலை ஊற்றின்

புத்தொளி பாய்ச்சினான் தமிழன்.

உப்பு பெய் சாகாட்டு உமணர்

உருட்டிய வாழ்வே அறிவின் 

திரள் நெறி காட்டிய வாழ்வு.

"ஐயூர் முடவனும்" ஒன்று நவின்றான்

"நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை

புன்காழ் நெல்லியின்" சில் விதிர்த்தன்ன‌

தமிழன் மண்ணே பொன்னுயிர்த்தும் ஆகும்.

தன்னுயிர் பொறிய நிமிர்ந்த கல்லில்

தன்னிறம் மாறா தகையன் தமிழன்.

________________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக