ஆறு திரள்வீர்
_______________________________________________
வடநாட்டார் தூங்கார் என
முக்குடை வேந்தர் முது வீரம்
வில் புலி மீன் என
வேறு திறம் மறந்து ஓர் திறம்
ஒன்றே நெஞ்சில் வைத்தார்.
வடபுலப்புகையின் பகைதனை
வெல்லுதல் அன்றி தமிழா
வேறு புலம் காண்கும் புல்லர்
அல்ல அல்ல யாம் என்றே
புலிகள் ஆகினார் கரிகள் ஆகினார்.
கலிமா துள்ளும் களிப்படை ஆகினார்.
முக்கொடியும் ஓர் கொடியாய்
முத்து சுடர்ந்த வெல் திறம் காட்டினார்.
அஃதே தான் அறிதி!ஒண்தமிழ்ச் செல்வா!
குறு குறு சாதி மத வெறித்தீயில்
கருகிடவோ அந்த கோவூரான்
இத்தீவரி தந்தான்!கேண்மின்.கேண்மின்.
வேல் மறம் உண்டு வேள் மறம் உண்டு.
மீன் மறம் கொண்டு கடலும் வென்றான்.
வல்வில் சாலும் பனிமலை மீதும்
கொடியினை நிறுத்தி கோலம் கண்டான்.
தமிழ் மறம் மூன்றும் ஒரு திறம் கொண்டு
வேர்ப்பகைக் கொன்று முக்குடை காக்க
வடபுலம் தென்புலம் யாவும் ஒருபுலம்
என்ன எழுந்து செந்திசை காட்டி
செயல் மறம் கிளர்ந்து ஒரூஉ ஓர்ந்து
வென்றி கோள்மீன் உறுமீன் அன்ன
கனல் விழி நோக்குமின்.காலம் மறையுமுன்
இமயமும் நகர்ந்தே தென் மின் ஆர்க்கும்
ஆறு திரள்வீர் அடுபகை கொல்வீர்.
_____________________________________________________
செவ்வூர் கிழான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக