வெள்ளி, 14 நவம்பர், 2025

பூவா? பூதமா?...குவாண்டம்.

 



பூவா? பூதமா?...குவாண்டம்.

_____________________________________________________________________________________

இ பரமசிவன் M A ,F I I I.


குவாண்டம் என்ன அலிபாபா குகையா?

அதனுள் என்ன தான் நடக்கிறது? இதை அறிய என்ரிக்கோ ஃபெர்மி ஒரு "பொன்னான விதி " கோல்டன் ரூல் ஒன்று கூறுகிறார்.அது சுவையானது. அப்படியென்றால் அது என்ன "டீயா காப்பியா"என்பீர்கள்.தூய தமிழ் வேண்டாமா? சரி.ஆம் அது சுவாரஸ்யமான ஆனால் நுட்பமான விளக்கம்.குவாண்டம் நமக்கு பழகிப்போனது.தூய தமிழ் என்றால் அதுஅழகான தொல்காப்பியத்தமிழில் "அளபடையம்" அல்லது அளபடை ஆகும்.

இது "உருமாற்ற விகிதம்" பற்றியது.எதன் உருமாற்றம்? அதில் தான் புதிர் இருக்கிறது.நடக்குமா? நடக்காதா?எனும் "நிகழ் தகழ்வு" விகிதம் பற்றியது.ஒரு நேர அலகுக்கு இந்த நிகழ்வு உருமாற்ற விகிதம் என்ன என்பதைஅறிவதே ஆகும். ஒரு நிச்சயமற்ற தன்மையை நிச்சயப்படுத்தப்ட்ட அலகில் அளவு செய்வதே (குவாண்டம்) ஆகும்.இப்படி எங்கோ மிதந்து கொண்டிருக்கிற நிலைப்பாடு(ஸ்டேட்) அதாவது ஆற்றலின் நிலைப்பாடும் கூட ஒரு மிதப்பில் தான் இருக்கும்.இது ஐஜென் ஸ்டேட் (மிதப்பு நிலைப்பாடு) எனப்படும்.அத்தகைய ஒரு நிலைப்பாடு அது போன்ற இன்னொரு ஆற்றல் மிதப்புனிலைப்பாடுகளின் குழுவுள் உருமாற்றப்படுகிறது.இவை குவாண்ட நிலைப்பாடுகள் ஆகும்.இது ஒரு தொடர்னிலையத்துள் (கன்டினுவம்) இருப்பதால் இதன் தாக்கத்தால் உள்ளீட்டுஆற்றல்பாடு (பெர்டர்பேஷன்)  வலுவற்றதாக இருக்கும்.அந்த உருமாற்ற விகிதமும் அந்த உள்ளீடு ஆற்றல்பாடு விகிதமும் நேரத்தோடு சாராததாக இருக்கும்.அப்போது அவ்விகிதங்கள் அவற்றின் சேர்க்கை வலு (கப்ளிங் ஸ்ட்ரெந்த்) நேர்நிலைப்பகுதி விகிதமாக (ப்ரோபோர்ஷனல்) இருக்கும்.இந்த சேர்க்கை என்பது அந்த குவாண்ட கட்டமைப்பின் துவக்க நிலைக்கும் இறுதி நிலைக்கும் இடையே உள்ள இயல்பை தீர்மானிக்கும்.அந்த இடைப்பட்ட நிலைப்பாடு உள்ளீடு ஆற்றல்பாட்டின் " அடுக்கு நிலை நிரல் கூறுகளை"( ஸ்குவேர் மேட்ரிக்ஸ் எலிமென்ட்ஸ்) சார்ந்தது தான்.அந்த கட்டமைப்புக்குள் இருக்கின்ற "நிலைப்பாடு அடர்த்தியையும்" இதே நிரல் கூறுகள் தீர்மானிக்கும்.

இதே விதி தான் அந்த இறுதி நிலைப்பாட்டின் போதும். (ஃபைனல் ஸ்டேட்) இறுதி நிலையை எட்டும்போது அந்த தொடர் நிலையத்தில் அது "துண்டு பட்ட நிலைப்பாடாக" இருக்கும்.(டிஸ்கிரீட்).அதாவது அந்த துண்டு படு நிலை என்பது ஒரு இயைபு இன்மை( டி கோஹரன்ஸ்) அடையும்.அந்த நிலையில் நிலைப்பாடுகளின் இறுக்க நிலை தளர்வு உறும்(ரிலேக்ஸேஷன்)  இது எப்படியெல்லாம் வெளிப்படும்?

(1) அணுக்கள் ஒன்றோடு ஒன்று மோதும் நிலை.

(2)ஆற்றல் உள்ளீடுகளின் "இரைச்சல்"(நாய்ஸ்) நிலை


இவற்றால் அடர்த்தி நிலைப்பாடுஅதன் எதிர்நிலைக்கு (ரெசிப்ரோக்கல்)தாவி விடும்.அதாவது "இயைபு இன்மை" என்பதன் அதிர்வுப்பட்டை (பேண்ட் வைட்த்) நிலையை எதிர்விகிதத்துக்கு இட்டுச்செல்லும்.


( TO BE CONTIUED)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக