தொட்டுத்தொட்டு தொடாமல்..
_________________________________________
சொற்கீரன்
அசிம்ப்டொடிக் ஃப்ரீடம் என்று
அன்டொனி.ஸீ அவருடைய
கணிதங்களை சுருட்டி மடக்கி
உருட்டுகிறார்.
ஆம் நம் மண்டையை நன்றாக
உருட்டுகிறார்.
குவாண்டம்
கால்களைக்கொண்டு
தொட்டும் தொடாமலும்
நர்த்தனம் ஆடுகிறது.
நாம் எளிதாக
அஞ்ஞானமும் விஞ்ஞானமும்
அடவுகள் காட்டுகின்றன
என்று
"கூத்தரசன்" கூந்தல் அலைகளைக்
கூவி கூவி
மயிர் சிலிர்க்க வைக்கிறது
என்று
கும்பிட்டுக் கூத்தாடலாம்.
இது முட்டாள்தனமும் அறிவியல்தனமும்
நடத்துகிற கூத்து.
தியரிடிகல் ஃபிசிக்ஸை
மெடஃபிசிக்ஸ் ஆக்குவதே
இந்த ப்ரொபபிலிடி உட்பொருள் தான்.
இது என்ன
ஆங்கிலம் கலந்த மணிப்பிரவாளம்
என நீங்கள் முகம் சுழிக்கலாம்.
சமஸ்கிருத மணிப்பிரவாளம்
நம் மண்டைக்குள் அடிமைச்சங்கிலிகளை
திணித்தது உங்களுக்கு பிடித்தது.
கொஞ்சம் அறிவு வெளிச்சத்துக்கு
ஏந்துகின்ற இந்த வெளிச்சம்
ஏன் உங்கள கண்களை கூச வைக்கிறது?
ஆல்பர்ட் ஐன்ஸ்டின்
இந்த "குவாண்டத்தை"
கடைசிவரை ஒத்துக்கொள்ளவே இல்லையே
"ஸ்போக்கி ஆக்ஷன்" என்று.
ஜோல்னா பைகள் சகிதம் வலம் வரும்
நம் அறிவுஜீவிகள்
முதலில் நாம் ஒரு "மனித ஜீவி" என்பதே
என்பதை மறந்து போய் விடுகிறார்கள்.
உண்மையான அறிவி(யல்)ஜீவிகள்
சோசியல் டைனாமிக்ஸில்
ஒரு குவாண்டம் டைனாமிக்ஸை
படிக்கிறார்கள்.
இவர்கள் பஜனை மண்டலிகளின்
பரமனை சாதிகளில் தேடுவதே
சனாதன வர்ண சித்தாந்தங்கள்
என்பதை மூடி மூடி வைத்து
முக்காடுகள் காட்டுகிறார்கள்.
__________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக