சனி, 8 நவம்பர், 2025

முடியாத பாராயணம்....

 


அதோ வருகிறார் ஒருவர்.

_________________________________

சொற்கீரன்



கடவுள் காடு மேடு 

எல்லாம்

தேடி அலைந்தார்.

அவர் முகம் பார்க்க 

அவருக்கு ஆசை.

பிம்பம் தானே பார்க்க 

வேண்டும்.

நீர்ப்பரப்பில் 

எட்டிப்பார்த்தார்.

அலைத்துளிர்ப்பில்

பூதமாகத் தெரிந்தார்.

ஆடாது அசையாது இருக்கும்

தடாகம் எதிரே முகம்

காட்டினார்.

அப்போதும்

அவர் என்ன நினைத்தாரோ

அது மட்டுமே

பிம்பமாக தெரிந்தது.

தன் முகம் காண விரும்பிய‌

அவருக்கு

தன் முகத்தை எப்படி காட்டுவது?

ஏனெனில் 

அவர் யார்?

அவர் எது?

என்பதே இன்னும்

ஒரு முடிவுக்கு வரவில்லையே!

அவர் முகத்தை அவர் இன்னுமே

பார்க்க வில்லையே.

ஆயிரம் தாமரைகளைக் குவித்து 

வைத்தாற்போல் இருக்கும்

என்றெல்லாம் அல்லவா

தினம் தினம்

அவர் மீது

ஸ்லோகங்களைக் 

குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவருக்கும் கூட‌

யாரிடம் இது பற்றிக் கேட்கவேண்டும் 

என்று தெரியவில்லை.

அப்போது இவர் எங்கிருக்கிறார் 

என்றும் கூட  தெரியவில்லை.

அதோ வேர்க்க விறு விறுக்க

ஓடி வருகிறார் ஒருவர்.

(தொடரும்)






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக