வியாழன், 27 நவம்பர், 2025

சொட்டாங்கல் விளையாட்டு

 

உடன்படு அன்றி முரண் படு

இதுவே வாழ்க்கை.

உடன் பட்டதால் உலகில் தோற்றம்.

முரண் பட்டதால் வானமும்  கையில்.

எதிர்மறை என்று ஒன்றில்லை

கண்ணாடிப் பிம்பமே அது.

சமப்பட இரண்டும் வேண்டும்.

பொருள் எனும் உயிர் அற்றதே

இரட்டைக்கிளவி.

பொருளோடு அடுக்கினால் அது

தமிழின் சிக்கி முக்கிக்கல்.

கவிப்பேரரசு அவர்களே

சொற்களின் சொட்டாங்கல் விளையாட்டு

உங்கள் தமிழ் விளையாட்டு.

எங்கள் கூழாங்கல் 

உன் கை வைரங்கள்.

பட்டை தீட்டு இனி இருளேது?

____சொற்கீரன்____

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக