வாழ்த்துமடல்!
_இ பரமசிவன்._
"தோழர் கே சுவாமிநாதன் அவர்களுக்கு
என் இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!"
பவளப்பெருமிதம் கண்ட பெருவிழா
அலைகள் இன்னும்
ஓய்ந்திடவில்லை ஓய்ந்திட வில்லை!
நம் எல் ஐ சி ஊழியர் சங்கம் இன்று
இமய உயரம் மிஞ்சி மேல்சென்று
பொலிகவே! பொலிகவே!
உங்கள் ஓயாப்பெரும்பணி
நம் ஒற்றுமை வெளிச்சம்!
நம் வரலாறு
நாடும் அறியும் ஏடும் அறியும்!
கம்பெனிக்காலம்
என்ற ஒன்று அன்று உண்டு!
"மரண நிதிகள்" குவித்து
மூட்டைகள் கட்டி
விழுங்கியது கடல் எனில்
விஞ்சியது துளியே!
இன்றும் தொடருமோ
அந்த கற்காலம்?
எனும் அச்சம் அச்சம்
என்றும் அச்சம்.
நம் சங்க இயக்கம்
நம் கலங்கரை விளக்கம்.
உங்கள் விளக்கு
சுழலும் விளக்கு!
திசைகள் யாவும் உங்கள்
வழி காட்டல்களே!
விரல் சொடுக்குவீர்!
வழியும் பிறந்திடும்.
எழுச்சிகள்! எழுச்சிகள்!
எங்கும் நம் எழுச்சிகள்!!
உங்கள் சுடர்ப்பணி தொடர்க!
எங்கள் இடர்களும் தொலைக!
வாழ்க! வாழ்க!!
நீவிர் நீடூழி வாழ்கவே!!
__________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக