திங்கள், 24 நவம்பர், 2025

நான் யார் ..நான் யார் ...?

 


நான்  யார் ..நான்  யார் ...?

______________________________________


நான்

யார் என்று

"நான்" ஒரு நாள்

கேட்டது.

நான் யாரென்று கேட்க‌

வேண்டுமானால்

நான் தானே 

கேட்க வேண்டும்.

எங்கிருந்து இந்தக்குரல்

.......

அடே..நீ தானடா நான்.

சரி யார் பேசுறது?

"அம்பாளா பேசுறது"?

அம்பாளாவும் இல்லை

கும்பமேளாவும் இல்லை.

உன் மனச்சவ்வு

"ஏ ஐ" மூலம்

பில்லியன் மைகள் வரை

நீண்டுவிட்டு தான்

மீண்டு வந்திருக்கிறது.

நீ 

கடவுள்னு ஏதோ சொல்லி

வைத்திருக்கிறாயே

அது தான் 

"நான்"யார் என்று

கேட்கிறது.

என்னது

கடவுள்னு ஒண்ணுமில்லையா?

.....................

மயங்கி விழுந்தது யார்?

நானா? நீயா?

அல்லது 

நீயா? நானா?

இப்போது

"குவாண்டம்" மெகானிக்ஸ்

ஒற்றையா ரெட்டையா

விளையாடுகிறது.

__________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக