சனி, 8 நவம்பர், 2025

தேவன்‍‍ சைத்தான் முகமூடிகள்

ஆட்கொல்லி நுண்ணறிவி

_____________________________________

சொற்கீரன்



குளு குளு குற்றால அருவி என்று

நுண் க‌ணித குவாண்டத்து

நுண் மாண் நுழைபுலம் 

நுழைந்தோரே அந்த‌

குவாண்டம் சொல்கிறது 

கேளுங்கள்!

"குழவி பிறப்பினும் ஊன் தடி பிறப்பினும்

வாளின் தப்பார்..."என்ற 

உங்கள் செங்கனற்சங்கத் தமிழ் வரி

கேட்டிருப்பீர்!

மனிதன் அடிமைத்தனத்துப் 

புழுநெளி வர்க்கத்தவன் 

அல்லன் அல்லன்.

அறிவின் கூரிய சிலுவை ஏறி

உயிர்க்கூழ் தரினும் தருவான்.

பள பளப் பிளாட்டினத்து

அடிமைச்சங்கிலி அறுத்தெறிய‌

தயங்கான்..தயங்காம்!

இவர் பேச்சு

சிந்தனை ஆணி அடித்த‌

ஒளி வெள்ளத்து ஊழிப்பேச்சு.

அந்த கவிஞ வேந்தர்கள் 

மூக்கூட்டணியினர் 

மூளவிட்ட எழுத்தின் 

தீயருவி குளித்தால் 

தீந்தமிழ் இனிக்கும் இனிக்கும்.

கேளுங்கள் கேளுங்கள்

கேட்டுக்கொண்டே இருங்கள்.

கவனம் கொள்வீர்.

செயற்கை நுண்ணறிவு எப்படி

இங்கே பரிணாமம் கொண்டது

மனிதம் மனிதம் தன்னையே

மக்கிபோக மடை திறந்தது?

பங்கு மூலதனச் சக்கரம் அங்கு

பலிகள் வாங்கும் பகடை ஆனது.

மூலதனம் என்பது உருண்டுதிரண்ட‌

உழைப்பின் வேர்வை பளிங்குத்துளியென‌

பாடம் சொன்ன மார்க்சின் வெளிச்சம்

இன்று புரிந்தது.ஒன்று தெளிந்தது.

இந்த வர்க்கமும் வேண்டம் இந்த‌

வெள்ளமும் வேண்டாம்.

லாபம் கொழுக்க மூளைந‌ரம்பின்

மூள் வெறி போதும் போதும்

உலகம் இனி நம் கைக்குட்டை.

என்றே தொடுத்தனர் கொடுத்தனர்

சாதி மத இன மொழித் தீப்பந்தம்.

அல்காரிதமா? அரக்கத்தனமா?

கல்லறை நிறைய 

சில்லறைக் குவிப்போம்.

தன் கழுத்தை தானே வெட்டும்

அறிவையும் இங்கு 

அல்காரிதம் ஆக்குவோம்.

ஆகா ஆகா ஓகோ ஒகோ

இந்த குபிட் மொழிக்குள்ளே

குகைகள் குகைகள் பில்லியன்கள்.

எலும்புக்கூடுகள் குவிந்தாலும்

அவையும் நமக்கு வேண்டும்

அவையே நம் ஜெனடிக் ஊற்று.

நம் மக்களை நாமே வார்ப்போம்.

பொருளாதாரக்  கூட்டமைப்பு இனி

சுரண்டல்கள் காட்டமைப்பே!

புரிந்து கொண்டீரோ

புரிந்து கொண்டீரோ

புயல்களின் கருவாய்

எழுச்சிகள் உருவாய்

எழுந்திடுவோமே

எழுந்திடுவோமே

எஞ்சும் சிலராய் இருப்பினும் நாம்

எரிமலை ஊற்றின் விதைகள் நாம்.

அறிவுக்கொழுந்து அடங்க மறுத்து

அகிலம் எங்கும் அது சுடரட்டும்.

தேவன்‍‍ சைத்தான் முகமூடிகள்

மலிந்து போன தேசமிது.

மனிதம் நெருப்பாய் அறிவாகி

மலர வேண்டிய தருணமிது.




வெறிபிடித்து இனவெறியை கக்கிய ஏஐ! கொத்து கொத்தாக பறிபோன உயிர்கள்! Ayesha Natarajan Speech

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக