சனி, 15 நவம்பர், 2025

"நல் விருந்து வானத்தவர்க்கு"

 


ஒரு "கலைக்கூடத்தில்"

திருவள்ளுவருக்கு 

அழைப்பிதழ் கொடுத்து

உட்காரவைத்து 

சினிமாப்படம் காட்டியவர்

இயக்குநர் சேகர் அவர்கள்.

"நல் விருந்து வானத்தவர்க்கு"

என்று வள்ளுவர் சொன்னது

இவருக்குத்தானோ?

இந்தப்படம் அருமை

அடுத்தப்படம் இன்னும் அருமை

என்று அடுத்து அடுத்து

கண்களுக்கு விருந்து

அளித்துக்கொண்டே இருந்தவர்

அல்லவா!

நல்லதொரு குடும்பம்

பல்கலைக்கழகக் கூடம் மட்டும் அல்ல.

ஒரு திரைப்படக்கூடமும் தான்.

அவர் மறைவு சினிமாக்கலைக்கு

ஒரு இழப்பு.

அவருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

_____________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக