செவ்வாய், 4 நவம்பர், 2025

பரல் நானூறு 3

 




பரல் நானூறு 3

______________________________________

சொற்கீரன்



அம்பி ஊரும் மணிநீர்ப் பரவை

அலைபடு அலைபடுப் படலம் போன்ம்.

தும்பி நுண்சிறை நுழைபடுத்தாங்கு

துன்புறல் இன்பம் தீண்டத் தீண்ட‌

அழல்பெரிது ஊழி இன் தீ பெருக்கும்.

பெரும, எந்தன் அமளி பரலிய அனிச்சம்

வேகும் வெந்து தணிப்பெருங்காடு.

கழை வளர் அடுக்கம் ஆடுமழை நீங்கி

சிமைய வாங்கும் ஓங்கு மணல் முன்றில்

கல்லாப்பெருங்கல் புல்லென புலவு மன்.

பொல்லாப் பொய்வான் கொல்பகை தீர்க்கும்.

கலிபரி விசைமான் கடுகியே விரைக.

பாசுவல் பெய்த புன்காற் பந்தர்

வாயில் படுக்கும் இளமணல் விரவி

ஈரம் பிழியக் கிடந்தமை அறிதி.அஃதென்

விழிநீர் தகைத்தே நோன்றல் காட்டும்.

_________________________________________


சிலம்புத்தமிழை 

சீந்துவார் இலையோ என‌

சீற்றம் கொண்டு

தமிழ்ப்பரல் சிலிர்த்ததில்

தெறித்தவையே இவை.

_________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக