நீ
யார்?
கண்ணாடி கேட்டது.
உன் பிம்பத்தின்
எதிர் பிம்பம்.
அப்படியானால்
நான் நீயா?
கண்ணாடி
சுக்கல் சுக்கலாக
சிதறியது.
தன்மை முன்னிலை இலக்கணங்கள்
காணாமல் போயின.
சங்கரரையும் காணவில்லை.
பாஷ்யங்களையும்
காணவில்லை.
_______________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக