விவேக் எனும் சின்னக்கலைவாணரே!
____________________________________________
நகைச்சுவைச்செல்வரே!
விவேக் எனும் சின்னக்கலைவாணரே!
அடுத்த நூற்றாண்டுக்கு எங்களை
நகர்த்தி விட்டுத்தான் சென்றீர்கள்.
எங்கள் நூற்றாண்டுகளை தொலைத்து விட்டு
அல்லவா
எங்கோ நிற்கிறோம் இன்று.
வம்புக்கு இழுப்பதில் யாரையும்
நீங்கள் விட்டு வைப்பதில்லை.
இந்த சமுதாயத்தின் கிழிசல்கள்
ஆயிரமும் உனக்கு
சன்னல்கள் தான்.
அத்தனையிலும் முகம் காட்டி
சமுதாயத்தின் அகம் காட்டுவதில்
உன்னை மிஞ்சியவர்கள் யார்?
நம் மக்கள் மைல் கற்களையும்
விட்டு வைப்படில்லை.
அதற்கும் துணி சுத்தி
சூலம் வைத்து எலுமிச்சம் பழம் குத்தி
பக்தி காட்டுவதை
படம் காட்டினீர்கள்.
குலுங்கி குலுங்கி சிரித்துக்
கை கொட்டினோம்.
நமக்கே தலையில் எலுமிச்சம்
பிழிய அனுப்பியிருக்கிறார்கள்
எஸ் ஐ ஆர் எனும் சூலத்தை அனுப்பி.
நீங்கள் சொன்னது போல்
இன்னும் ஆயிரம் பெரியார்கள்
வந்தாலும் போதாது.
கோடம்பாக்கத்துக்காரன் தானே
நீயும்.
ஒரு கோடம்பாக்கத்துக்காரன்
தமிழுக்கு
கோடரி தூக்கிக்கொண்டு
அலப்பறை பண்ணுவதைப் பார்த்தால்
என்ன செய்வாய்?
என்ன செய்வாயா...
அந்த கொரானாவுக்கு நன்றி சொல்வேன்.
இவன் சிரிக்க வைத்தாலும்
சிந்திக்க மாட்டான்.
சிந்திக்க வைத்தாலும்
சிலிர்த்துக்கொள்ள மாட்டானே.
க்யூவில் நிற்க இவனுக்கு
அர்ச்சனைச்சீட்டும் சினிமா டிக்கட்டும்
ஒன்று தானே.
முழுசாய் சிந்திக்கத் தெரிந்தால்
இவர்கள் ஏன் இன்னும்
இந்த புல் கூட
டில்லியைக்கேட்டுக்கொண்டு தான்
முளைக்கும் என்று
ஜோஸ்யங்கள் பார்த்துக்கொண்டிருப்பானோ?
தமிழ் மக்களே
உங்கள் சிந்தனை மிகவும் கூர்மை வாய்ந்தது.
சினிமாக்கள் உங்களை மழுங்கடிக்க முடியாது.
தமிழர்களே
கூர்மை கொள்ளுங்கள்...அதன்
ஓர்மை கொள்ளுங்கள்.
_________________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக