சூபர் சிம்மெட்ரி (மீமிசை சமப்பாடு)
______இ பரமசிவன் எம் ஏ,டி ஆர் எஸ்,எஃப் ஐ ஐ_______________
புத்தகம் க்யூ எஃப் டி இன் அ நட்ஷெல் (எழுதியது:ஆண்டனி ஸீ)
இது இயற்பியலில் ஒரு வியப்பியல்.எல்லாமும் சமம் ஆகி விடுகிற வியப்பு தான்.இயற்பியலில் எலக்ட்ரான் ப்ரோட்ரான் நியூட்ரான் என்று ஆரம்பித்து எத்தனை ஆற்றல் துகள்கள் உள்ளன.ஒவ்வொன்றின் அணு எண் அணு நிறை அதன் சுழல் விசை சுழல் திசை நிறை என்று நாம் பட்டியல் போட்டால் அது மாளாது.விஞ்ஞானிகளின்
கனவுக்கோட்பாடு என்னவென்றால் ஏன் துகள் ஆற்றல் நிறை உந்தம் எல்லாம் வேறு வேறு பட்டு பலப்பல கணித சூத்திரங்களாய் இருக்கவேண்டும்? ஒரே சூத்திரம்.ஒரே ஒழுங்கியல் மற்றும் ஒரே சமத்தன்மையோடு இயங்கும் தன்மை எல்லாம் ஏன் ஒன்றாக இருக்கக்கூடாது? என்பதே அந்த கனவு.இதுவே தான் தத்துவ வாதிகளுக்கும் உள்ளது.ஆனால் விஞ்ஞானிகள் இவற்றின் வேறுபட்ட "கூறு பட்ட" தன்மைக்களைத்தான் ஆராய வேண்டி உள்ளது.
முதலில் அடைப்படையாக இரு கூறுகள் ஆக்குகிறார்கள்.அவை தான் "போசான்கள்" "ஃபெர்மியான்கள்" ஆகும்.முன்னது நிறையின் துகள்கள்.பின்னது ஆற்றலின் துகள்கள்.எனவே பின்னது "நிறையற்றவை"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக