பரந்தாமன் பூனை போல...
__________________________________________
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகட்டும்
என்று
மோவாயை சொறிந்து கொள்வோம்.
நம் கடவுள்களை
வேண்டிக் கொள்வோம்..
..அடே அப்பா..
இந்த அவதாரம் அந்த அவதாரம்னு
இங்கே வந்திராதே.
நீ எடுத்த
ஜனநாயக அவதாரமே
நார் நாரா கிழிஞ்சு தொங்குது..
பாற்கடல்ல அந்த அமுத கலசத்த
வச்சுகிட்டு
பாரபட்சம் காட்டினாயே..
ஒன்னோட அந்த
கொடும்பாவமே
எங்க
கோடி கோடி ஜென்மங்களே
கொதறிப்போட்டுட்டுருக்கு.
அங்கே இங்கே போயி
சம்பவாமி யுகே யுகேன்னு
பகவான் செட்டிங்க
காட்டணும்னு
வந்துடாதே.
"அது யாருப்பா இங்க
கடவுள்னு சொல்லிக்கிட்டு வர்ரது?
கடவுளோடு நேர் அவதாரம் தான்
நான்னு ஒருத்தன் இருக்கேன்ல..
அப்புறம் என்ன?
ஏ காமெரா அங்கே ஒனக்கு
என்ன டேக் இருக்கு...
இங்க வா..
என்ன விட்டு போகக்கூடாது..
தெரியும்ல...னு
பருங்குரல்கள் கேக்கும்...
சரி தான் போங்கப்பா..
ஆள விடுங்க...
அந்த பரந்தாமன் பூனை போல
போயே போய் விட்டார்...
ஆகாசத்துக்கு மேலெ போய்
ஒளிஞ்சுகிட்டாரு...
_____________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக