இனி என்ன செய்ய?
___________________________________
பணம்
"பத்தாயிரமும் செய்யும்"
வாக்காளர் பட்டியல்
சத்தம் இல்லாமல்
மின் மயானத்தில்
சாம்பல்களாயின.
ஏற்கனவே அழுக்குகளின்
பொதி மூட்டையாய்ப்போன
சாஸ்திரங்கள்
இந்த வாய்செத்தவர்களின்
முதுகுகளில் ஏறி
சவாரி செய்யக்கிளம்பி விடும்.
பார்லிமெண்டில்
பொம்மைக்கொலு தொடரும்.
கணிப்பொறிக்குள்
இயற்கைமூளையே
தன்னைக் காவு கொடுத்துக்கொள்ளும்.
செயற்கை மூளயில்
மீண்டும் ஈடன் தோட்டம்
புதிய ஏற்பாடுகளுக்கு
பாத்திக்கள் அமைக்கும்.
முளைக்கும் புல் கூட
இனி ரோபோட்டுகள் தான்.
பிரபஞ்சங்களின் மூளைகளுக்குள்
இனி டாலர் மழை.
அறிவு வெறும்
ப்ராபபலிடியாய்
ஆகாயங்களில் மிதக்கும்.
ரப்பர் சூரியன்கள்
பந்து விளையாடிக்கொண்டிருக்கும்.
________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக