திங்கள், 1 ஏப்ரல், 2019

நீ யார்?
நீ யார்?
===============================================ருத்ரா

நீ யார்?
நீ என்ன அவதாரம்?
நீ கடவுளாயிருந்தால்
உனக்கும் எதிரியாய் இருக்கும்
அந்த இன்னொரு கடவுளை
தூணிலிருந்து
பிளந்து வந்து அதன்
குடல் கிழிக்கப்போகிறாயா?
மனித வக்கிரங்களுக்கு
வர்ணம் அடிக்க
இந்த அவதாரங்கள் தான்
உனக்கு எளிதாக இருக்கிறதா?
மனிதம்
மேலும் சிறந்த மாமனிதமாய்
மலர்ச்சியுற்று
வளர்ச்சியுற்று
அதன் மூளை  மண்டலங்களில்
கிளைக்கும்
கோடிகோடி கணக்கான
பிரபஞ்சங்களை எல்லாம்
இயற்பியல் கணிதவியலில்
சுருட்டி வைத்துக்கொண்ட
அந்த "ப்ரேன் காஸ்மாலஜி"யை
புரிந்து கொள்ள
நீ கொப்பளிக்கும்
அசுரத்தனமான
ஒளியின்
லாவாவின் பிசாசா இது?

========================================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக